உண்மை

உண்மைக்குத்தான் எத்துனை வலிமை?வலிகளும் சோதனைகளும் எத்தனை வந்தாலும்....
ஒவ்வொரு முறை வலியிலிருந்து மீள்கையில் உண்மை இன்னும் வலுப்பெறுகிறது.
ஒவ்வொரு முறை சோதனைகளிலிருந்து மீள்கையில் உண்மை இன்னும் வைரப்படுகிறது.
உண்மையை எவ்வளவு மறைத்தாலும் மறுக்க முடியாது.
உறவுகளில் உண்மையாய் இருந்தால்
உணர்வுகள் மதிப்புறும்
நட்பில் உண்மையாய் இருப்பின்
நம்பிக்கை சிறப்புறும்
காதலில் உண்மையாய் இருப்பின்
கனவு மெய்ப்படும்
வாழ்வில் உண்மையாய் இருப்பின்
அமைதி நிலைப்படும்.

எழுதியவர் : சுபாசுந்தர் (18-Mar-16, 7:35 pm)
சேர்த்தது : சுபாசுந்தர்
Tanglish : unmai
பார்வை : 651

மேலே