கவிதையே கவிதையே

கவிதையே கவிதையே
உன்னை பெண்ணாய் வரைந்தவன் யாரடி..?
கவிஞனாய் எனை மாற்றவே கண்ணால் பார்த்ததும் நீயடி..

நீ விழிகள் கொண்டே வேட்டையாடும் வேட்டைக்காரிதானடி
அன்பை எய்தே அடிமை செய்யும் கெட்டிக்காரிதானடி..

உன் ஒற்றை ஓரப் பார்வையில்
கிறக்கம் கொண்டவன் தானடி
உன்னை பார்த்த பின்னரே உறங்க மறந்தவன் நானடி...

பூக்கள் பறித்து பெண்ணாய் சமைத்து
பிரம்மன் உன்னை செய்தானோ
பூமி வந்த தேவதை என்றே
என்னைப் பாட வைத்தானோ

முச்சங்கம் தவழ்ந்து வளர்ந்த தமிழும்
உன்னைப் பாடி கவியாகுமடி
உன் அங்கம் மின்னும் ஜொலிப்பைக் கேட்டு
பசுந்தங்கம் இங்கே ஏங்குமடி..

காற்றாடும் உன் குழல் கண்டால்
வான் நீந்தும் முகிலெல்லாம்
உன் குழலாட தரையிறங்கும்
கண்ணே உன் கண் கண்டால்
கடல் நீந்தும் மீன்களெல்லாம்
உயிர் மறந்தே கரையேறும்..

உன் பாதங்கள் நடந்திடவே
என் சாலைகள் முடிவின்றி நீண்டிடுமே
என் வேதங்கள் நான்கல்லவே
உன் காதலும் ஐந்தாய் சேர்ந்திடுமே

கோவில் சுற்றி நீயும் தொழுதால்
அந்த சாமிகிங்கே கால் வலிக்கும்
கோல மயில் உன்னழகை பாட
யாருகிங்கே வாய் வலிக்கும்..???

எழுதியவர் : மணி அமரன் (27-Mar-16, 10:02 pm)
பார்வை : 336

மேலே