நீ என்னை பிரிந்த அந்த வினாடி 555

என்னவளே...

உன்னை முதன் முதலில் பார்த்தபோது
என் மனதுக்குள் பேரின்பம்...

உன்னிடம் காதலை சொல்ல
நினைத்த போதெல்லாம்...

படபடுத்த என் இதயம்...

நான் உன்னை காதலிக்க
ஆரமித்த நாள் முதல்...

எனக்கு உன்னைத்தவிர
யாரையும் பிடிக்கவில்லை...

இந்த உலகத்தில் நீயும் நானும்
மட்டும் இருப்பதுபோல்...

உள்ளுக்குள் ஒரு
உணர்வு எனக்கு...

நீ என்னைவிட்டு சென்றபின் காதல்
என்ற வார்த்தைகூட பிடிக்கவில்லையடி...

இந்த உலகத்தில் நான் மட்டும்
அனாதை போல் உணர்கிறேன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (5-Apr-16, 8:58 pm)
பார்வை : 956

மேலே