நான் அவளைக் காதலிக்கிறேன்
அவள்...
பார்ப்பதற்கு மிக அழகானவள்,
நான் அவளைக் காதலிக்கிறேன்!
அவள்...
என் மனதுக்கும் பிடித்தமானவள்,
நான் அவளைக் காதலிக்கிறேன்!
அவள்...
நல்ல மனோநிலையில் இருக்கிறாள்,
நான் அவளைக் காதலிக்கிறேன்!
அவள்...
அவளைச் சந்திக்க நல்ல தருணமிதுவே,
நான் அவளைக் காதலிக்கிறேன்!
அவளிடம்...
காதலைச் சொல்ல சரியான இடமிதுவே,
நான் அவளைக் காதலிக்கிறேன்!
அவள்...
நற்குடும்ப வரலாறு உடையவள்,
நான் அவளைக் காதலிக்கிறேன்!
அவள்...
நல்ல விதமான வளர்ப்பும் அல்லவா...!
நான் அவளைக் காதலிக்கிறேன்!!
ஆனாலும்...
என் செய்வேன்?
அவள் என்னைக் காதலிக்கவில்லையே!