வர்ணம் பூசிய வாழ்க்கையடா
![](https://eluthu.com/images/loading.gif)
ஆசையெனும் வர்ணம் பூசி
காத்திருக்கிறது வாலிபம்
கனவுகளில் வர்ணம் பூசி
சிறகடிக்கிறது இதயம்
மௌனமெனும் வர்ணம் பூசி
இம்சிக்கிறது சம்மதம்
வாழ்க்கை என்னும் சுவர்மீது
கல்யாணம் என்னும் வர்ணம்பூச
உன் வருகைதானே தூரிகை .
எதிர்பார்ப்பென்னும் வாளிகளில்
எதிர்காலங்களுக்கான
வருணங்களை நிரப்பிவைத்து
தவமிருக்கிறேன் .
நான் ஓவியமாவதும்
காவியமாவதும்
உன் தூரிகையின் கைகளில்..
*மெய்யன் நடராஜ்