நடுசாம கனவுகள் 1- அறைக்கு வெளியே

நள்ளிரவின் அயர்ந்த தூக்கத்தில்... கடந்து கொண்டிருந்த காலம் .. சாமத்தை காதலியை புணர்தல் போல உரசிக்கொள்ள... உறங்கும் என் உடலை நானே பார்க்கிறேன்... எந்த பூகம்பத்தாலோ என் அறை மட்டும் பிய்த்துகொண்டு விண்வெளியில் மிதப்பதை அறிகிறேன்... மூளையில் அட்ரினலின் சுரப்பதை அடிவயிற்று நடுக்கம் உணர்த்துகிறது.... ஏன் பயம் எதற்கு பயம்? ... ஆக்சிஜன் குறைகிறதாலோ... தனிமையின் சிறையில் கலக்கத்துடன் அமர்ந்திருக்க ... அறையின் ஆறாவது திசையில் ஜன்னல் திறந்திருப்பதை பார்க்கிறேன்... குறையும் ஆக்சிஜன் திடீரென வெளியேறிவிடுமோ?.... விண்வெளியில் பரவாதே... யாரறிவார் பரவினாலும் ஆச்சரியம் இல்லை இத்தனை விநோதங்களில் அது வெறும் சிறகு போலதான்...
அறைக்கு வெளியே செல்லலாமா? போய் தான் பார்ப்போமே... வாய்ப்புகள் வாரவாரமா வருகிறது?.. அட என் உடல் சுவாசிக்கவில்லையே? அய்யோ அப்போ நான் இறந்துவிட்டேனா? பயத்தில் என் உடல்மேல் உருண்டு பிரள்கிறேன் அனால் நான் அதனுடன் ஒன்றவில்லை... பயம் நெஞ்சுக்கூட்டை பிளக்கிறது...
மூளை வெற்றிடமாக பார்க்கிறது... என் உடலுக்கு நானே உஷ்ணபடுத்துகிறேன்.... என் வாயில் நானே மூச்சை உள்செலுத்துகிறேன்.... என்ன ஒரு கொடுமை எனக்கு நானே லிப்லாக் செய்ய வேண்டியுள்ளது... அத்தனை அவசரத்திலும் ஜன்னல் பார்க்கிறேன் வெளியே இருளை தின்கிறது ஒரு பேரொளி... அது வளர்ந்தபடி என்னை நோக்கி வருகிறது... மயக்கம் வருகிறது... நெருங்க நெருங்க பயம் அதிகரிக்கிறது... அறைக்கதவை தறிக்கிறேன் தூரத்து பேரொளி திடீரென என்னில் பட்டு தெறிக்கிறது... ச்ஷ்ஹா என்ற சப்தத்துடன் எழுகிறேன்... விடிந்தது என் காலை... அறைக்கு வெளியே சூரியன் உதித்திருந்தது...

எழுதியவர் : (23-Apr-16, 6:41 pm)
பார்வை : 46

மேலே