கலைந்து போன என் கனவுகளுக்காக

" கடந்து வந்த பாதைகள் கசப்பாய் மாறினாலும்
நாம் நடந்து சென்ற பாதை யாவும் இன்னும்
நம் நினைவுகளால் உயிர்த்துதான் வாழ்கின்றன ...."

" காலம் தந்த சாபமென நான் கரைந்து கரைந்து உறைந்தாலும்
கண்களின் மைய புள்ளியில் நீ உயிர் சித்திரமாய்
உறைந்து என்னவோ உண்மைதான் ....."

" மழை கண்ட மழலையாய் உன்னை ரசித்தால் என்னவோ
இடியென இறங்கினாய் என் நெஞ்சில்
குடை பிடித்தும் கொட்டி தீர்கின்றன சாரலாய் உன் நினைவுகள் ..."

"காலத்தால் அழியாத காவியமாய் நிலைக்குமென
நம் நட்பை கொட்டி கொட்டி தந்ததால் என்னவோ
தரை தட்டி தட்டி வீழ்ந்து நொறுங்குகின்றன இதயங்கள் ...."

" வந்த வழியெலாம் துசுதட்டிய நினைவுகள் ஆக
காத்திருந்த காலமெலாம் கதியற்று போக
நிலைத்த நட்பெல்லாம் நியதியென்று ஆக
காசு பணமெல்லாம் ஆடம்பரம் ஆக
விலையுர்ந்த எப்பொருளும் விலையற்று நிற்க
கதியென்று இருந்த கனவெல்லாம் சதியென்று உணர
கண்முன் தெரியும் நீ ஒருவனே நிகரற்ற என் உயிராய் ஆனாய் என் தோழா..."

" கண்ணில் வழியும் சிறு துளி நீரில்
பெரும் பாறை ஒன்றை இட்டு சிதரவிட்டவர் எவரோ ...?"

" இறைவா இதுவே என் விதயென்று நீ விதிதிட்டால்
உன் கரம் சேரும் என் வேண்டுதலும் எதற்கு ...?

காலங்களோடு நான் கரைந்துதான் போகவேண்டும் என்றால்
கதி சேரும் இப்புண்ணிய பலன்கள்தான் எதற்கு ...?

புண்ணியம் செய்வோர்கெல்லாம் சொர்க்கத்தில் பலன் என்றால்
ஆயிரம் ஆயிரம் கோடி உயிர் கொண்ட இப்பூமிதான் எதற்கு...?

விருபமற்ற செயல்களெல்லாம் விதி செய்யும் சதிஎன நீ உரைத்தால்
பெரும் கடவுளேன இவுலகில் கடவுளாய் நீ தான் எதற்கு ....?

உரைப்பாய் விதியென்ற அப்பொய்மைக்கு முடிசூட்டி நீ நகர்வாய்
******************* அன்பால் நிறைவாய் *******************************

எழுதியவர் : திவ்யா (9-May-16, 5:12 pm)
பார்வை : 299

மேலே