vijiatchu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vijiatchu |
இடம் | : sathyamangalam |
பிறந்த தேதி | : 29-Apr-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 295 |
புள்ளி | : 23 |
நான் திவ்யா என் கவிதை அனைத்தும் என் நிழலான என் நட்பிற்காக சமர்பிக்கிறேன் .....
உன் மனம் என்னிடம் வந்த பின் என் மனம்;
மேய்ப்பன் இல்லாத மந்தை ஆனது😊
பயமறியா இளங்கன்றாய் குதித்தாடுது😊
அணை கட்டா ஆறாக ஆர்ப்பரிக்குது😊
மதகு உடைத்த மடை நீராக பாய்ந்தோடுது😊
வானூர்திக்கும் உயரமாக என் மன ஊர்தி பறக்கிறது😊
தொலைபேசி, அலைபேசி இல்லாமல் எண்ண அலைகள்
உன்னிடம் பேசுகிறது😊
சரிகமபதநி தெரியாமலே சங்கீதம் தானே வருகிறது😊
கால்கள் ஜதியின்றி தாளம் தப்பாது நடனமாடுகிறது😊
வானோர் வாழும் சொர்க்கம் கீழே
என் காலடியில் கண்டது😊
துன்பம், நரகம் போன்ற சொற்களை
என் அகராதி மறந்தது😊
உலகின் அத்தனை மொழியிலும்
அன்பு, காதல் என்ற வார்த்தைகளை
தெளிவாய்த் தெரிந்து கொண்டது😊
நின் பாராமுகம் காண தேடித் தேடி
நான் தொலைந்துபோகும் முன்,
என் சேரா இமைகளும் சேர்ந்து
என்னை வதைத்துவிடும் போலும்..!
கனவுகளெல்லாம் கசிந்துருக
தினம் தினம் பிதற்றுகிறேன்..!
உணர்வுகளெல்லாம் உறைந்துபோக
உனை தேடித்திரிகிறேன்..!
மெட்டியோடு குட்டிச்சண்டை நீயும் போட,
என் கண்களில் கட்டிவைத்து உனை
காதல் செய்யத்தான் தேடுகிறேன்..!
உன் இதழ் முத்தத்தில் என் நெற்றிக்குங்குமமும்
சேர்ந்து சிவந்திடத்தான் ஏங்குகிறேன்..!
தனிமை என்னை நிந்திக்கும் வேளை
தலைவா உன் தாய்மடி தேடுகிறேன்..!
இனிமையை நானும் சந்திக்கத்தான்
என் இனியவனை அழைக்கிறேன்..!
வான் நிலவை வனத்திலும், நிலத்திலும்
எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா
தெரியவில்லை
ஒரே உயிரில் அறிவையும் மனதையும்
வைத்தது மாபெரும் தவறென்று ....
எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா
தெரியவில்லை
ஒரே உயிரில் அறிவையும் மனதையும்
வைத்தது மாபெரும் தவறென்று ....
எல்லாம் அறிந்த கடவுளுக்கு கூடவா
தெரியவில்லை
ஒரே உயிரில் அறிவையும் மனதையும்
வைத்தது மாபெரும் தவறென்று ....
எவர் சொன்னது நட்பு புனிதம் என்று
எவர் சொன்னது நட்பு இலக்கியம் என்று
எவர் சொன்னது நட்பு கலைத்திடாத காவியம் என்று
இறை சொன்னதா
உயிர் சொன்னதா
வாழ்கை சொன்னதா
உண்மையான உறவை தேர்ந்து எடுக்காவிடின்
உள்ளமும் சொல்லும் நட்பும் பொய்மையும்
கலந்துவிட்ட கரைத்தான் என்று ......
எத்தனை முறை முயற்சித்தும் மாரமறுகின்றது
நீ விட்டு சென்ற ரணம்
நீ தந்ததால் என்னவோ ஆறவும் மறுக்கின்றது
சுவாசத்தில் கலந்ததால் மூச்சும் வலிக்கின்றது
இதயத்தில் நிறைந்ததால் இடியாய் துடிக்கின்றது
ஓ ! உயிரில் உறைந்ததால் மரணத்தில்தான் வெல்வேனோ
இல்லை
மறைந்தாலும் மறுஜென்மத்தில் தொடர்வெனோ .......
மதியின் மனதால் உன்னை
மறக்க நினைக்கையில் மட்டும்
உறக்கம் கலைந்து
இன்னும் பலமாய் உயிர் பெற்று
வளர்கிறது உன் நினைவுகள் ...
" கடந்து வந்த பாதைகள் கசப்பாய் மாறினாலும்
நாம் நடந்து சென்ற பாதை யாவும் இன்னும்
நம் நினைவுகளால் உயிர்த்துதான் வாழ்கின்றன ...."
" காலம் தந்த சாபமென நான் கரைந்து கரைந்து உறைந்தாலும்
கண்களின் மைய புள்ளியில் நீ உயிர் சித்திரமாய்
உறைந்து என்னவோ உண்மைதான் ....."
" மழை கண்ட மழலையாய் உன்னை ரசித்தால் என்னவோ
இடியென இறங்கினாய் என் நெஞ்சில்
குடை பிடித்தும் கொட்டி தீர்கின்றன சாரலாய் உன் நினைவுகள் ..."
"காலத்தால் அழியாத காவியமாய் நிலைக்குமென
நம் நட்பை கொட்டி கொட்டி தந்ததால் என்னவோ
தரை தட்டி தட்டி வீழ்ந்து நொறுங்குகின்றன இதயங்கள் ...."
" வந்த வழியெலாம் துசுதட்டிய நினைவு
நீண்ட நேர மௌனத்திற்கு பின்னும்
ஆயிரம் சண்டைகளுக்கு பின்னும்
என் செவிகளில் விழவதென்னவோ
நீ தந்த முத்தத்தின் சத்தங்கள் மட்டுமே !!!!!!