அணிலெனும் அன்பு
![](https://eluthu.com/images/loading.gif)
முகட்டின் மேல் காற்றுக்கு உரசுகிறதென்று
கிளையை வெட்டிவிட்டேன்.
கிளையிலிருந்து ஓட்டுக்குத்தாவமுடியாத அணிலொன்று
தூரமாய்
போய்விட்டது வீடென்று
துக்கமாய் கிறீச்சிட்டது.
இடைவெளி விடாத
அக்குரலின் துயரம்
என் வீட்டையே
சுமந்தபடியிருந்தது.
- நிலாகண்ணன்