நெருக்கடி கற்றுத் தந்த பாடம்
குடும்ப சூழ்நிலையில்
அந்தஸ்தைக் காப்பாற்ற
கற்றுக் கொடுக்கும்
உழைப்பு என்ற பாடம் !!
தேர்வு நேரத்தில்
சுய மரியாதையை
தக்க வைக்க
நம்மை சுறுசுறுப்பாக்கும்
நெருக்கடி நிலை !!!
தேர்தல் நேரத்தில்
தொகுதியை பிடிக்க
தோன்றியதை இலவசமாய்
கூறி ஓட்டு வாங்கும்
நெருக்கடி நிலை
இப்படி நெருக்கடி நம்மை
நிதானிக்க சில நேரம்
இடம் கொடுக்கிறது
சில நேரம் பாடம்கற்றுக்
கொடுக்கிறது
சில நேரம் பாடம்
கற்பிக்கிறது!!