என் வலிகள் உனக்கு புரியாது 555

பிரியமானவளே...

உயிராக நேசித்த என்னை நீ எப்போது
இருந்து என்னை வெறுக்க ஆரமித்தாய்...

காதலிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள்
என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள்...

சொன்னவனை
முட்டாள் என்றேன்...

இப்போதுதானடி எனக்கு
புரிந்தது...

நீ என்னை வெறுப்பது
தெரியாமலே...

நான் உன்னிடம் சிரித்து
பேசிக்கொண்டு இருக்கிறேன்...

நீயும் சிரித்தே என்னிடம்
பேசினாய் அன்று...

நீ கோவப்படும் நேரங்களில் என்
அழைப்புகளை எடுக்கவே யோசிப்பாய்...

விடாமல் முயற்சிப்பே நான்
நீ பதில் கொடுப்பாய்...

நீ என்னை தீயினால் சுடவில்லை
காயங்கள் ஆறிவிட...

இதயத்தின் வலியடி
நீ கொடுத்தது...

இதயதுடிப்பு நிற்கும்வரை
ரணமாய் கொள்ளும்...

நீ என்னிடம் பேசாதே என்று
சொன்னவள் நீ சிரித்துக்கொண்டே...

ஏனோ இன்று வரை பேசாமலே
நீ போய்விட்டாய் என்னைவிட்டு...

என் வலிகள் உனக்கு புரியாது
உனக்கு புரிந்திருந்தால்...

நீ என்னை
பிரிந்திருக்கமாட்டாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-May-16, 9:40 pm)
பார்வை : 1262

மேலே