அண்ணன்

தாயாகி தாலாட்ட வந்தான்
தந்தையாகி அரவணைக்க வந்தான்

பாசத்துடன் பாதுகாக்க வந்தான்
நேசத்துடன் நேசிக்க வந்தான்

வாழ்க்கையில் வழிகாட்ட வந்தான்
துன்பத்தில் துணையாய் நின்றான்

நடந்து செல்ல கற்றுக்கொடுத்தான்
சிரித்து பேச சொல்லிக்கொடுத்தான்

தவறு செய்தால் திருத்திவிட்டான்
மேலும் செய்யாமல் பார்த்துக்கொண்டான்

அன்பு மழையில்
முழுவதும் நனைத்தான் – அவன்

என் வாழ்வின்
மற்றொரு பாகம்...!

இப்படிக்கு,

அன்பு அண்ணனின்
செல்லத் தங்கை

எழுதியவர் : Paapu (21-May-16, 9:00 pm)
Tanglish : annan
பார்வை : 78

மேலே