சவ்வு பூனை

சவ்வு மியா, சவ்வு மியா, அடியே சவ்வு பூனை எங்கடி போய்த் தொலஞ்ச?
@#@
@#@
@#@
பாட்டி என்ன அடிக்கடி சவ்வு மியா, சவ்வு மியா -ன்னு கூப்பிட்டு என்னோட கோவத்தக் கெளறிட்டு இருக்கறீங்க. நா என்னைக்கு எரிமலையா வெடிக்கப்போறேன்னு தெரில.
@#@
என்னடி பண்ணட்டும் சவ்வு .....
@#@
பாட்டி உங்கள அப்பிடியே கழுத்தப் பிடிச்சு நசுக்கணும் போல இருக்குது.
@#@
அதையாவது செய்யடி சவ்வு. எனக்கு சீக்கரம் சிவலோகப் பதவியாவது கெடைக்கும். ஏண்டி என்னோட வாயிலே நொழையாத பேரா உனக்கு வச்சிருக்காங்க உங்கப்பனும் ஆத்தாளும். என்னால சவ்வு மியா -ன்னு தாங் கூப்பட முடியும். எனக்கு கோவம் வந்தாத் தான் உன்ன நாஞ் சவ்வுப் பூனைன்னு கூப்படறேன்.
@%@
எம் பேரு சவ்ம்யா. அதுக்கு ' அமைதி'ன்னு அர்த்தம். நா ஆயிரந் தடவை சவ்ம்யா, சவ்ம்யான்னு சொல்லிக்குடுத்தாலும் எம்பேர ஒழுங்கா உச்சரிக்காம சவ்வு மியா சவ்வு மியான்னே சொல்லறீங்க.
@%@
நா என்னடி ஆத்தா பண்ணட்டும். என்னால அப்பிடித்தாஞ் சொல்லமுடியும். நாங் கூப்படற மாதிரி நம்ம தாய் மொழிலே பேரு வச்சிருந்தா நா ஏண்டி உன்ன சவ்வு மியான்னு கூப்படப் போறேன். நீ பண்ணற ரவுடித்தனக்கு உனக்கு அமைதின்னு அர்த்தம் தர்ற பேரையா வச்சிருக்காங்க.
#%@
இருங்க. அம்மாவும் அப்பாவும வீட்டுக்கு வந்ததும் அழுது பொரண்டாவது நீங்க உச்சரிக்கற மாதிரி நல்ல தமிழ்ப் பேரா என்னோட பேர சட்ட பூர்வமா மாத்தச் சொல்லறேன்.

@@@@@@@@@@@@@@@@
படம்: ட்விட்டர் காம்

எழுதியவர் : மலர் (26-May-16, 11:03 pm)
பார்வை : 147

மேலே