ஆசை கவிஞர் இரா இரவி

ஆசை ! கவிஞர் இரா .இரவி !

பொருள் மீதான ஆசை
திருட்டு
கைவிலங்கு !

பொன் மீதான ஆசை
தவறான வழி
தடுக்கி விழுந்தனர் !

மது மீதான ஆசை
உயிர் பறித்தது
மனிதனை !

மாது மீதான ஆசை
சபலம் சஞ்சலம்
உயிர்க்கொல்லி நோய் !

பணத்தின் மீதான ஆசை
வழிவகுத்தது ஊழல்
சிறை !

புகழ் மீதான ஆசை
விளம்பரம்
விவகாரம் !

புழு மீதான ஆசை
சிக்க வைத்தது
மீனை !

வடை மீதான ஆசை
மாட்ட வைத்தது
எலியை !

ஆசையே அழிவுக்குக் காரணம்
அன்றே உரைத்தார்
புத்தர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (27-May-16, 9:13 am)
பார்வை : 108

மேலே