அவரவர் பாதையைத் தேடி

மழைநீர் பூமியைச் சேர்வதும்,
ஆறு கடலைத் தேடி ஓடுவதும்,
இரவு பகலைத் தேடி நகர்வதும்
அதனதன் பாதையைத் தேடி!

மலர்கள் சூரியனைக் கண்டு மலர்வதும்
மரங்கள் காற்றடிக்கும் திக்கில்
.....தலை வணங்குவதும்,
அதனதன் பாதையைத் தேடி!

அன்பே, நானும் உன் முகம் நோக்கி,
உன்னையே என்னுயிர் காக்கும் சுனைநீராக,
உணர்வாக எண்ணி வாழ்கிறேன்! – எல்லாமே
அவரவர் பாதையைத் தேடி!

இரு விகற்ப நேரிசை வெண்பா

என்அன்பே, நானும் உனதுமுகம் நோக்கினேன்,
உன்னையே என்னுயிர் காக்கின்ற - இன்சுனை
நீராக எண்ணியே வாழ்கிறேன்! உன்னன்பைத்
தாராள மாய்த்தா எனக்கு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-16, 9:43 pm)
பார்வை : 771

மேலே