அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி நன்றி பாக்யா வார இதழ்

அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

யாராக இருந்தாலும்
வரவேண்டும்
வரிசையில் !

வரிசையைப் பார்த்துப் போகாமல்
வஞ்சியைப் பார்த்து
மலைத்து விட்டனர் !

இது என்ன வரிசை
குடும்ப அட்டைக்கு
சீனி வாங்கவா ?

வரிசையைப் பார்க்காமல்
வேறு திசைப்பார்ப்பது
குற்றம் !

பணத்தில் சிக்கனம் நன்று
ஆடையில் சிக்கனம்
நன்றன்று !

ஆடை குறையக் குறைய
ஊதியம் கூடுகின்றது
நடிகைக்கு !



.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Jun-16, 9:24 am)
பார்வை : 106

மேலே