படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி நன்றி பாக்யா வார இதழ்

படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

நன்றி பாக்யா வார இதழ் !

மிதித்தவனையும் முன்னேற்றும்
அகிம்சைவாதி
மிதிவண்டி !

மகிழுந்தில் வராத மகிழ்ச்சி
மிதிவண்டியில் வருகிறது
இன்பத்தில் காதல் !

ஏழைகளின் வாகனம்
எளிமையான வாகனம்
மிதிவண்டி !

சுற்றுச்சுழல் மாசாக்காத வண்டி
சுற்றி வர வசதியான வண்டி
சுகமான வண்டி !

தேவையில்லை எரிபொருள்
மிதித்தால் போதும்
நகரும் மிதிவண்டி !

விலகு ! விலகு !
காதலர் வண்டி வருது
விலகு ! விலகு !

ஊர் கண்பட்டால்
அடிதடியில் முடியும்
காதல் சவ்வாரி !

பணக்கார இணைகள் வருத்தத்தில்
ஏழை இணைகள் பரவசத்தில்
பெரிதல்ல பணம் !

ஆடி மகிழுந்தில் ஊடல் ஜோடி
மிதி வண்டியில்
கூடல் ஜோடி !


.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Jun-16, 9:15 am)
பார்வை : 117

மேலே