எது கனம்

ஆசிரியர்: "ஒரு கிலோ பூ, ஒரு கிலோ இரும்பு. இதுல எது கனம் அதிகம்?"

மாணவன்: "இரும்பு சார்."

ஆசிரியர் : "அடே லூசு.!! எப்படிடா? இரண்டின் எடையும் ஒன்று தானே ?"

மாணவன்: "நான் இல்லைங்கிறேன் சார்."

ஆசிரியர்: "இப்போ நீ
நிரூபிக்கலைன்னா, உன்னை வெளுக்கப்போறேன் பாரு..!

மாணவன்: "ஓகே சார். இப்போ உங்க மண்டை மேல நான் ஒரு கிலோ பூவை வீசுறேன். அப்பறம் ஒரு கிலோ இரும்பையும் வீசுறேன். அப்புறம் நீங்களே சொல்லுவீங்க எது கனம்னு."

ஆசிரியர் : !!!!!

மாணவன்: "அப்போ நாளைக்கு லீவா சார்?"

ஆசிரியர் : "எமகாதக பய புள்ள.
என்னமா யோசிக்குது பாரு..!"

எழுதியவர் : செல்வமணி (19-Jun-16, 9:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 122

மேலே