தினம் ஒரு காதல் தாலாட்டு தனிமை - 62 = 141

“இளம் பூவின் வாசமே
முகம் பாத்து வீசுதே
காதல் மோக பந்தமே
காம தீபம் ஏற்றுதே…!

இளங்காற்றே நீ கேளு
இதமாக சுரம் பாடு
என் இன்னிசை குழுவில்
நீயும் வந்து பங்கேறு..!”

மூங்கில் தோட்டத்தில் முள்ளில்லா கிளையில்
பச்சை கிளிகள் முதுமொழி பேசுது
மூக்கால் துவாரமிட்டு குழலிசை மீட்கையில்
நாக்கில் தேனூறும் நாதமாய் இனிக்கிறது..

பன்னீர் திராட்சை பகிர்ந்தளிக்கும் விருந்தில்
கழுநீர் கலக்கின்ற கலக களவாணிகளே.
வாழ்கின்ற காதலில் வீண்பழி சுமத்தாதீர்
சேருகின்ற நெஞ்சங்களில் சேறள்ளி பூசாதீர்


இதயத்தின் கோட்டையில் எழுப்பிய காதலறை
இடுகாட்டு மூர்க்கர்கள் பிரிப்பதேன் காதலரை
காதலிலே காமம் கடுகளவும் இல்லையெனில்
காதலின் அர்த்தம் வேறாக கொள்ளப்படும்

உதயத்தின் வீச்சை கார்மேகம் மறைத்தாலும்
காமத்தின் வீச்சை யார்மனமும் மறைக்காது
ஏங்கும் உயிர்களே விரைந்து வாருங்கள்
நெஞ்சம் தாங்கும் காதலை வெளியிடுங்கள்..

எழுதியவர் : சாய்மாறன் (21-Jun-16, 9:30 pm)
பார்வை : 79

மேலே