எதிர்த்து போராடு மனிதா

காலம் உன்னை சோதிக்கத்தான் செய்யும்
அதற்காக சோர்ந்துவிடாதே
சாதனைக்கான தூரம்
இன்னும் சற்று அருகில்தான் உள்ளது .........
தோல்விகளுக்காக கவலை கொள்ளாதே
கேள்விகளை உனக்குள்ளே கேட்டுக்கொள்ள பழகிக்கொள்ளு
ஏன் உனக்கு வெற்றி கிடைக்கவில்லையென்று ..........
வருத்தப்பட்டு வாழ்க்கையில் வருந்துவதைவிட
திருத்தவேண்டியதை திருத்திப்பார்
திருப்பம் நிச்சயம் ...........
வெற்றியாளர்களைவிட
தோற்றவர்களின் எண்ணிக்கைதான்
உலகத்தில் அதிகம் -
உண்மையை புரிந்துகொள் -உதாசீனக்காரர்களை ஓரம்தள்...........
ஆயிரம் வாலிகளை தாங்கிய பின்புதான்
கற்கள்கூட சிலையாய் அவதரிக்கிறது
இல்லாவிட்டால் கல் என்றுமே கல்தான் .............
அவஸ்த்தையும் அவமானங்களும் கூட
உனக்கான அனுபவ ஆதாரங்களை அளிக்கும் -
தோல்விகளை திருத்தினால்
வெற்றி விரைவிலே உன் விலாசம் தேடும் ............
உன்னை உரசிப்பார்க்கும்
ஒவ்வொரு தோல்வியும்
வைரத்தை ஒளிரவைக்க உதவும்
பட்டையை போன்றது ..............
இலகுவான மண்ணில் மட்டும்
முளைப்பதில்லை விதைகள்
பலசமயம் பாறைகளை கூட
பதம் பார்த்திருக்கின்றன என்பதே உண்மை .............
முயற்சியும் நம்பிக்கையும் இருந்தால்
இமயம் கூட
நீ எளிதில் தொடும் இலக்காகலாம் ..............
பழிப்பவரின் பரிகாசங்களின் பக்கம்
உன் பார்வையை திருப்பாதே
ஏன் என்றால் அது உன் லட்சியத்தின்
பாதையையே மாற்றிவிடும் ...........
ஏற்றுக்கொண்ட இலக்கின்மேல்
பார்வையை கூர்மைப்படுத்து
நிச்சயம் நீ அடைய துடிக்கும்
இலக்கு உனக்கு சாத்தியமே - வெற்றியும் நிச்சயமே .............