பூவும் புயலும்

அந்தத் தோட்டம்
ஒரு பூவை இழந்தது.
அந்தத் தோட்டத்தை
ஒரு மின்னல் தாக்கியது.
அந்த மின்னலில் இளம்
பூ மட்டும் கருகியது.

ஸ்வாதி - இந்தப் பூவை
ஸ்வாசித்திருந்தது அந்த மின்னல்.
கண் இமைக்கும் நேரத்தில் - அது
காவு வாங்கியது.

சூரியன் உதிப்பதற்குள் - பூவின்
சுவாசத்தை நாசப்படுத்தியது.

தோட்டத்தில் பூத்த அந்த மலர்
தோட்டாவைப் போல் உள்ள
கொடுவாளில் சத்தமின்றி
கொலையுண்டு ரத்தத்தில் உறைந்தது.

வாழவேண்டிய அந்தப் பூவை - காதல்
வீழ வைத்து வாசத்தை நாசப்படுத்தியது.

நெஞ்சுக்குள் ஒரு தலைக்கு காதலா? - இதை
நெடுவாளால் வெட்டி முடித்து வைப்பதா?
இருமணமும் இணைந்தால்தான் காதல்.
இணைய மறுத்த மனதை
இப்படியா சிதறவைப்பது?

பின் தொடர்ந்து வந்தவன் இளைஞனா?
பாசக் கயிற்றை வீசவந்த எமனா?
இளைஞனோ? எமனோ? ஏதும் அறியாமல்
இளைஞி அவளின் ஆசைக் கனவுகள்
அகோரமாய் முடிந்ததே.
அழகாய் பூத்து வளர்ந்தவள்
அலங்கோலமாய் சிதறிக் கிடந்தாளே.

எழுதியவர் : ச.சந்திரமௌலி. (6-Jul-16, 4:45 am)
Tanglish : poovum puyalum
பார்வை : 135

மேலே