காதல் நீதியாகும்•••

காட்டைச் சுட்டெரிக்கும்
காட்டுத் தீயைக் காட்டிலும்
கொடுமையானது காதல் தீ
கொடூ ரமான துங்கூட

காதலன் பற்று என்பான்
காதலி பற்றி விடுவாள்
காதலி ஒற்று என்பாள்
காதலன் ஒற்றி விடுவான்

இவ்விருவரும் சேர்ந்தொரு
காதல் காவியம் படைத்திட !

எதிர் கொண்டு வரும் எத்தனை எதிர்ப்பு க்கள்
எத்தனையாயினும் அத்தனையையும் !

மாமலையே யாயினுமதைச் சிறுக் கடுகென
மதித்துத் தன்னை !

ஈன்றோரோ தீயில் தீய்ந்து மனம் தீக்கரை யாகிடச் செய்யும் !

இனபந்துக்கள் தலையில் முக்காடிட்டிடச் செயதிடும் இதுவேயந்தக் காதல் காவிய நீதியாகும்

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 9:29 am)
பார்வை : 63

மேலே