நெஞ்சம் மறப்பதில்லை, நினைவை இழப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை - அது
நினைவை இழப்பதில்லை.
அனிச்சமலராய் காதல் - ஒருமுறை
முகர்ந்தாலோ வாடிவிடும்.
முதல் முறையாய் தொடுவதில் மட்டும் தான்
உணர அந்த அரிய ஸ்பரிசம்
ரோஜாவென்றாலே வனப்பு தானே, மறுமுறை
அங்கே வனப்பிருந்தால் அது ரோஜாவாகுமா?
தன்மானமென்று தரணியறியும் உயிருக்கு நிகரானது
உலகம் எல்லாம் உயர்த்தி பிடித்து பெருமை கொண்டது
அப்படிப்பட்டதால் தான் அன்றைய காதல் ஒரு முறை ஒரே முறை
அக்காதலை தான் நெஞ்சம் மறப்பதில்லை, நினைவையும் இழப்பதில்லை.
ஆனால் இன்றோ
'use and throw' வாழ்க்கையானதே
ஒட்டுப்போட்டு இறுக்கி அமுக்கி
குமுறிக்கொண்டும் சகித்துக்கொண்டும் வாழத்துணிந்ததால்தானோ -
நற்குணங்களுக்கு மரியாதை ? அது வெறும் ஒப்புக்கு மட்டுமே.
வெறும் மதிப்புக்கு எல்லாம் இங்கே வேலையே இல்லை.
இனி இங்கே
நெஞ்சம் மறக்கும் நினைவுகள் அழியும்
ஏனெனில்
rose is a rose,
thats all ..