காதல் பிணைப்பு
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
உன்னுள் என்னை கண்டேன்
நீ நானாகி விட்டாய்
என்னிடத்தில உன் மனதைக் கொடுத்தாய்
என்னுள் உன்னைக் கண்டாய்
இனி நீ வேறு நான் வேறு இல்லையே
நாம் ஆகி ஓர் உயிராய்
ஈருடலாய் உள்ளோம்
உன் வலி நம் வலி
உன் சுகம் நம் சுகம்
இதுவே நம் காதல் பிணைப்பு