என் ஆத்மா சாந்தி அடைந்தது உங்களில் கலந்து

உன்னை திட்டும் பொழுதெல்லாம்
உயிரோடு
என்னுடன்
இருந்தாயேடி
(புன்னகைத்தபடியே
வாழ்ந்தாயேடி)

இன்று
உன்னை நேசிக்கிறேன்
என்று சொல்லும்பொழுது
உயிரை ஏனடி விட்டாய்

இது போதும் மாமா எனக்கு

இந்த வார்த்தையை
கேட்கத்தான்
இத்தனை நாளும்
உயிர் வாழ்ந்தேன்
இன்று செவி குளிர
கேட்டுவிட்டேன்

உன்னோடு
நூறு சென்மம்
வாழ்ந்துவிட்ட
திருப்தியை
அடைந்துவிட்டேன்
மாமா

நான் ஆகாயத்தில் பறக்கிறேன்
பூமியில் மிதக்கிறேன்
உங்கள் மடி கிடப்பதினால்

இந்த சூழலை விட்டால்
இனி எந்த சூழலும்
இப்படி ஒரு நிம்மதியை தராது
ஆதலால்
தான்
இப்பொழுதே உங்கள் தோளில்
மாலையாகிறேன்
உங்கள் கையால் (கை எனும்)
மாலையணிந்து

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Aug-16, 12:46 pm)
பார்வை : 202

மேலே