இயற்கையும் நானும் - சிறு உரையாடல்

இமைகள் மூடி,
மழைத்துளி வேண்டி
ஒரு
மௌனமான பிராத்தனை!

கனவில் வந்த வருணன்
கசங்கிய கண்களுடன்
சொன்னான்!
இப்படிப்பட்ட வெயிலில்
என் வருகை கடினமென்று!

இனியும் பொறுக்காது,
கதிரவனிடம் கத்தினேன்!
எப்போது நிறுத்துவாய்?
இந்த கடும் வெயிலையென்று!

உன்னை பாதுகாத்த
ஓசோனை சல்லடையாக்கி விட்டு,
என்னை வினவ
உனக்கென்ன அதிகாரம் என்றான்!

ஓசோனை பார்த்து,
உன் உடலில், ஏன்
இதனை காயங்கள்
என்றேன்!

கரிய நச்சு வாயுக்களை,
என் மீது பரவ விட்டு
இப்போது ஏன்?
திடீர் பாசம் என்றான்!

மரங்களை பார்த்து கேட்டேன்!
உனக்கு கருணையே இல்லையா?
எங்கே போனது?
சுத்தமான கற்று என்று?

உன் குழந்தை தூங்கும்,
தொட்டில் முதல்
உன் அப்பன் சென்ற
சவப்பெட்டி வரை!
என்னை வெட்டி விட்டு
இப்போது என்ன
துணிச்சல் என்றான்?

வற்றிய ஆற்றை பார்த்து,
உன் அசுத்தம்
என்னை,
முகம் சுளிக்க வைக்கிறது,
என்றேன்!

என் வளத்தை
அடிவயிறு வரை உறிந்தும்!
அமில நீரை
வரைமுறை இல்லாமல் கலந்த
உனக்கு, என்னை தூற்ற
என்ன அருகதை?
என்றாள்!

கடலளவு குற்றத்தை
என்னிடம் வைத்துக்கொண்டு!
யாருக்கும் உதவாத,
என் இரு துளி மழைத்துளியை!
தரையில் தழுவ விட்டு!

அதன் மரணத்தை
அமைதியாய்
வேடிக்கை பார்த்தேன்!

எழுதியவர் : Sherish பிரபு (11-Aug-16, 8:34 pm)
பார்வை : 1605

மேலே