நாமுத்துக்குமார் அண்ணனுக்கு
நா.முத்துகுமார்
அண்ணனுக்கு ...
அண்ணனே..
அகல விழிகளில்
ஆல மரமென சோகங்கள்
நீயோ வேருன்றி சென்றாய்
பூக்களென சிந்துகிறோம்
கண்ணீர் அஞ்சலிகளை...
நீ பிடித்த எழுதுகோலை
காலன்தான் கேட்டானோ?
நீதான்
உயிர் கொடுத்து வென்றாயோ ...
கண்மூடி தமிழ்ரகசியம் ரசிக்கின்ற அண்ணனே..
யாருக்கு பாட்டெழுத விண்ணுலகம் சென்றாயோ ...
தாங்கும் இதயம் எனக்கில்லை
திரும்பி வந்துவிடு அண்ணனே....
உனக்கு மணம்தூவும் பூக்களும் கண்ணீர் சிந்துகிறது சோகத்தில்
நீ ரசித்த மனம் தேடி ...
எவ்விதம் ஆறுதல் சொல்வேன் ....
நீ படைத்த கவிதைகளெல்லாம்
உயிர்தந்த உறைவிடம் கேட்டால்
தமிழ்த்தாயும் என்ன செய்வாள்?
வந்துவிடு அண்ணனே ..
அருகில் தான்
சித்திரையும் வந்துவிடும்
உன் விரல்கோர்த்து விடியல் சொல்ல....
உன் மரணம் காண விடிந்தானோ
மஞ்சள் நிற கைவீசி...
கதிரவனே -நீ சென்று விடு
அண்ணனை தந்து விடு ...
ஆழ்ந்த சிந்தையிலே
மூச்சு விட மறந்தாயோ
நீ சிந்தும் கவிக்காண
இன்று கூட்டம் அதிகம் தான்
போதும் அண்ணா
எழுந்து வா ...
பாரதியின் இடம்காண காலனுக்கு முத்தம் தந்து
அவனுடன் சென்றாயோ ...
இரங்கல் என்று கூறிவிட
உன் மரணம் தான் உண்மையில்லை...
உன் கண்கள் கண்ட காட்சியெல்லாம்
சிந்தைக்குள் பூட்டிகொண்டு
எங்கு தான் சென்றாயோ?
கடவுளுடன் கரம்கோர்த்து
எதை நீயும் படைத்தாலும்
சீக்கிரம் வத்து விடு ...
தமிழ்த்தாயும் பாவம்
அண்ணா ...
பிரியாது உன் உயிர் ..
காற்றிலும் கவிதை தேடி
திரும்புவார் ...
தமிழர்களின் மூச்சுக்காற்றாய்
கரையாமல் நா.முத்துகுமார்
மீண்டும் தமிழ்த்தாயின் குழந்தையாக....
அதுவரை உன் இடத்தை சோகம்தான் நிரப்பிகொள்ளும் கண்ணீரில் நிரப்பினாலும் பயன் இராது..
சீக்கிரம் வந்து விடு ..
சோகத்தின் வரிகளில் இன்று:மருதுபாண்டியன். க