காதல்இரயில்பயணம்
இந்த
காதல் பயணம் என்பது
ஒரு இரயில் பயணம் பெண்ணே!
நமக்குரிய ரயில் நிலையத்தில்
நாம் இறங்கிய பின்னே,
நம்மோடு பயணித்தவர்களை பற்றி
ஏதோ ஓர் தருணம்
ஓர் உணர்வு தோன்றுவதுபோல!
ஏதோ ஒரு நாளில்
ஓர் ஞாபகம் தோன்றுவதே போல!
இந்த
காதல் பயணத்தில்
நாம் இருவர் பிரிய நேரிடும்போது
எதிர் காலகட்டத்தில்
என் பற்றி நீயோ!
உன் பற்றி நானோ!
என் மகளிடமோ!உன் மகனிடமோ!
இது பற்றி பேசுகையில்.....,
ஓ!!!
இந்த காதல் பயணம்
உண்மையிலே ஒரு இரயில் பயணம் தான்!!