அரசருக்கு பாராட்டு நகைச்சுவைக்காக எழுதியது
பாராளும் பேரரசர்களும்
போற்றிடும் மாமன்னா !
இங்கிதமறியா
இம்சையரசே வாழ்க !
கைக்குழந்தையும் சிரிக்கிறது
உந்தன் கேலிக்கூத்தால் !
சிரிப்பூட்டி
மகிழ்விக்கும்
சிந்தனையற்ற
கோமாளியே !
தோற்றமே எங்களுக்கு
வேடிக்கை ..
தோற்பதே உங்களுக்கு
வாடிக்கை ...
மொழியார்வமும்
கலையார்வமும்
இம்மியளவும் இல்லாத
இமயத்தின் உச்சமே !
வாழத்தான் வேண்டுமா
சிந்தியுங்கள் ....
பழனி குமார்