தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் -60 = 199

“ என்னமோ நான் எண்ணினேன் – அதை
உன்னிடம் சொல்ல முந்தினேன்... !”

“உன் எண்ணமே என் கன்னமே - தேனை
உன்னிதழில் மெதுவாய் சிந்தினேன்..!”

என் ரம்பையே உன் அன்பினால்
இன்ப பயணம் வெகு எளிதானதே

என் அன்பனே உன் பண்பினால்
இதய பாசம் பண் மடங்கானதே !

உன்னையே நான் நினைத்தேன்
உதிரி முத்தங்காளாய் கொடுத்தேன்

உள்ளத்திலே இடம் பிடித்தேன்
ஊதுவத்திப்போல் மண மணத்தேன்


வானிலே பால்நிலா வட்டம் இடுவது
அந்தி சுகம் காண்பதை சாட்சி சொல்வதற்கு !

வாழ்விலே காமநிலா நிலைத்து நீடிப்பது
சுகபோக இலக்கை மெல்ல அடைவதற்கு !

சொந்த பந்தங்கள் யாவும் சொல்லாமல் வருவதில்லை..

இன்ப துன்பங்கள் வாழ்வில் இல்லாமல் இருப்பதில்லை..

எழுதியவர் : சாய்மாறன் (21-Aug-16, 5:01 pm)
பார்வை : 116

மேலே