காதல்
![](https://eluthu.com/images/loading.gif)
மேகத்திற்கு காற்று சொல்லும் காதல் நீரானது
வானிற்கு நிலவு சொல்லும் காதல் ஒளியானது
மண்ணிற்கு விதை சொல்லும் காதல்பயிரானது
கணவன் மனைவிக்கு சொல்லும் காதல் கருவானது
கருவிற்கு தாய் சொல்லும் காதல் உறவானது
மழைக்கு நீர் சொல்லும் காதல் ஆறானது
காதலுக்கு காதல் சொல்லும் காதல் காதலானது
அதுபோல்
இரு மனங்களுக்கிடையே மலரும் காதலையும்
காதலிப்போம்