மன்னிப்பாயா எனை மனைவியே

மன்னிப்பாயா மன்னிப்பாயா பெண்
மனமே உனை
மறந்து போன என்
மனம் மறுபடியும் உனை
உனை சேர துடிக்குதடி
மறந்து போன என்
மனம் அதை மன்னிப்பாயா .....
உன் கையை
உதறி தள்ளி கைதியாய் இருந்த
தீய காதலில் இருந்து
திரும்பி(திருந்தி) வந்து மீண்டும்
உன் கை பிடிக்க ஏங்கும்
எனை மன்னிப்பாயா மனைவியே
எனை மன்னிப்பாயா ........
உன் அழகு முகம் தரும்
போதையை மறந்து மரணம் தரும்
போதையை அருந்தி நலிவுற்ற
என் உடலும்
என் உள்ளமும் உனை
சேர துடிக்குதடி உயிரே
மன்னிப்பாயா எனை
மன்னிப்பாயா ...............
சந்தேக தீயில்
சறுக்கி வீழ்ந்து
சங்கட தீயில் எரிந்து
சாகும் எனை உன் அன்புகொண்டு
உத்தமியே உயிர்ப்பிப்பாயா
உலகில் மறுபடியும் புது
மனிதனாய் எனை
உன் அன்பு பெற
இயலாது அதிக பணம்
கேட்டு உனை தள்ளி வைத்து
இன்னலை இலவசமாய் பெற்ற எனை
இழுத்து அன்பில் அனைத்து கொள்வாயா
இல்லை வெறுப்பால் எனை கொல்வாயா
என்னவளே என் தவறை மன்னிப்பாயா மன்னிப்பாயா .......
உனை காணாது
கண்ணீர் கொண்டு நிற்கும் என்
கண்கள் உனை கண்டு ஆனந்த
கண்ணீர் சிந்த என் முன் வந்து
எனை மன்னிப்பாயா மனைவியே
எனை மன்னிப்பாயா ............