நம்பிக்கைதான் வாழ்க்கை

தன்னம்பிக்கை ஒன்று
உன்னிடம் இன்று
இல்லாத போது ....

எல்லாத்தையும் நீயின்று
நம்பித்தான் ஆக வேண்டும்..!

இதுவரை நீயிங்கு
பிறரை நம்பி ஏமாந்தது போதும்....

துணிந்து கேள்வி ஒன்றைக் கேட்டுப்பார்
உண்மைதனை உணர்வாய் அப்போது...!

படித்து ஆராய்ந்து அறிவதை விட
எதையும் அனுபவித்து அறிந்து கொள் !

வள்ளுவன் வார்த்தைகள்
இரண்டடிதான் எனினும்....
அவை விண்ணைத் தொடும் கண்...!

இல்லாதவனுக்கு இருக்கும் குணம்
பணம் இருப்பவனுக்கு -அவை இருப்பதில்லை....
காரணம் சுயநலம்...!

எதற்கும் முயலாமல் இருந்தால்...
நீயொரு நடை பிணம்!
ஆதலால் என்னால் முடியுமென்று
தினம் எழுந்து முயன்றிடு....
வாழ்க்கை வெற்றியின் எல்லைக் கோட்டினை அறிந்திடு!

முயன்றால் முடியாதது எதுவுமில்லை...!
அதற்கு எடுத்துக்காட்டுதானே
வலிமை மிக்கதொரு இளம் மங்கை..!
தன்னம்பிக்கைதானே இவளது வாழ்க்கை......!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Aug-16, 11:18 pm)
பார்வை : 141

மேலே