இது கிராமத்து காதல் ​

ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல​...
அன்ன​ நடையுடனே
அன்னக்கிளியவள்​ ​
அலங்கார சிலையவள்
அல்லிக்​ கொடியிடையாள்
​அள்ளி​ ​முடித்த​க் கூந்தலுடன்
அலைபாயும்​ விழிகளுடன்
அலாக்காக குடத்தினை
அரைவட்ட இடுப்பினில்
அழகுடனே சுமந்திட்டு
அக்கம்பக்கம் பார்வையை
அலைமோதும் ஆவலுடன்
அகதிகளாய்​ திரிந்திடும்
அடங்கிடா வேட்கையுடன்
​அரும்பசியுள்ள ஆண்களை
அலட்சிய​ச் சிரிப்புடனே
​​அபிநயக் கலையுடனே
அசைந்தாடி​ செல்கிறாள்
அடிமனதை​த் ​ தொடுகிறாள்
​அணைத்திடத் தூண்டுகிறாள்
அடியேனுக்கும் இந்தநிலை ....!


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Aug-16, 2:33 pm)
பார்வை : 234

மேலே