தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 63 = 211
“பிரபஞ்சம் காதல் நெஞ்சத்தை அள்ளும்
காதல் பஞ்சம் இல்லாத அட்சய பாத்திரம் !
மஞ்சம் இட்டோம் மலர்களின் மூலம்
அதில் தஞ்சம் புகுந்தால் காம சூத்திரம் !”
சாரக்காத்து அடிக்குது - சத்தம் போடுது
இளமை தவிக்குது - அணைக்க துடிக்குது
வாய்க்கா வரப்புள வயசுப்பொண்ணு தவிப்பது
எனக்குப் புரியுது என்னை என்னன்னமோ பண்ணுது
வயசு பதினாறு வந்து வாலிபத்தை முறுக்குது
உள்ளுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா சூடு ஏத்துது
பஞ்சணையை விரிக்கிறேன் நெஞ்சணையை இறுக்கினேன்
உச்சிமுதல் பாதம்வரை இச்சைமழை பொழிகிறேன்
காதல் பிரவாகம் இளமையில் அரங்கேறும்
இதமுடன் இசைப்பதே தனிப்பட்ட சுரமாகும்
அன்பான ராசா அழகான ரோசா
ஆலாபனை பாடு புதுசு புதுசா
ஓடும் மான்களைப் போல்
ஆடும் மயில்களைப் போல்
துள்ளும் மீன்களைப் போல்
துடிக்கும் கண்களைப் போல்
உறவது கொண்டாடும் உள்ளமது பண்பாடும்
உயிரது உறவாடும் உணர்ச்சியது சதுராடும்
மலர் தேடும் வண்டைப் போல்
மடி தேடும் கன்றைப் போல்
குயில் பாடும் பாட்டைப் போல்
கூடி வாழும் காக்கைப் போல்
உறவது கொண்டாடும் உள்ளமது பண்பாடும்
உயிரது உறவாடும் உணர்ச்சியது சதுராடும்
குந்தம்மா தேவியே -
குலமகள் ராதையே
குணங்களில் சீதையே -
நீ என்றென்றும் என் ராணியே !
உறவது கொண்டாடும் - உள்ளமது பண்பாடும்
உயிரது உறவாடும் - உணர்ச்சியது சதுராடும் !