நிழல் தேடும் சூரியன்

தந்தை வெறும் பந்தம்அல்ல
அவன் ஒரு தியாக சின்னம்
அவன் ஒரு சரித்திர நாயகன்....

தந்தை படும் இன்னல்கள்
எல்லாம் இலைமறை கனியாகவே
இருந்து விடுகிறது...

புலிவாய் புகினும் அதை
பிடுங்கி தன்பிள்ளைக்கு ஊட்ட
சற்றும் தயங்காத உள்ளம் தந்தையுள்ளம்...

தனக்கென்று வாழாமல் தன்
பிள்ளைகளுக்காகவே தன்
இன்னுயிரையும் கொடுப்பவன்...

சூரியனும் நிழல் தேடலாம் அனால்
ஒரு தந்தை ஓய்விலும் ஓய்வு தேடுவதில்லை

தந்தையின் வலி பிள்ளைக்கு
தெரிவதில்லை...
அதை அவன் தந்தையானபிறகே
உணர்கிறான்... உணராமலும்...

கல்வி முதல் கல்யாணம் வரை
ஒரு தந்தையின் பங்கு
சொல்லி தீராதவை....
இதனால் தான் என்னவோ
கடவுள் தந்தைக்கு பிரசவ வலி
கொடுக்கவில்லை போலும்...

தன் மகனுக்கு மட்டுமல்ல
தன் மகனின்
மகனுக்கும் அவனுடைய
சேவைகள் தொடர்கிறது...

இத்தனையும் பெற்ற மகன்
தன் தந்தைக்கு திருப்பி செய்யும் கைமாறுதான் என்ன ???....

எழுதியவர் : செல்வமுத்து.M (2-Sep-16, 10:23 pm)
பார்வை : 93

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே