விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
தும்பிக்கை உடைவன்
நம்பிக்கை கொண்டவன் ....
தாய் தந்தையரை
உலகமாய் நினைத்தவன் ....
சுற்றி வந்து மாங்கனியை
வெற்றி பெற்றவன் .....
தெருவுக்கு தெரு
வீற்றிறுப்பவன் ....
நம் தேவைகளை
தெரிந்திருப்பவன்....
நம் பிரச்சினைகளை
நமக்கு முன் தீர்த்திடுபவன் .....
அப்பனுக்கே புத்தி சொன்ன
முதல் பிள்ளை இவன் ....
இவன் கையோப்பம் இட்டு
தொடங்கும் அத்தனைக்கும்
வெற்றி கொடுத்திடுபவன் .....
எளிமையாய் இருப்பவன்
எருக்கம்பூ மாலையை விரும்பிடுவன் ....
எலி வாகனத்தின்
சொந்தக்காரன் அவன்.....
மோதகமும் கொழுக்கட்டையும்
விரும்புவான் அவன் .....
சிவ பார்வதியின்
மூத்த பிள்ளை அவன் ....
உலகத்தின் முழு முதற் கடவுள்
அவன் ....
அவனை வணங்கி எல்லா வளங்களையும் செல்வங்களையும்
பெற்றிடுங்கள் .....
இனிய விநாயகர் சதுர்த்தி
நல் வாழ்த்துக்கள் ....