அவள்
நான் விதைத்து
கொண்டே இருக்கிறேன்
காதலை ....
அவள் முளைத்து
கொண்டே இருக்கிறாள்
கவிதையாய்....
நான் பார்த்து
கொண்டே இருக்கிறேன்
அவளை ....
அவள் பிம்பம்
தாங்கும் கண்ணாடி
ஆக்குகிறாள் என்னை ....
நான் முழ்கி
கொண்டிருக்கிறேன்
அவள் நினைவில்....
அவள் எழுந்து
விடுகிறாள்
என் கனவில் .....