கற்பு திருடும் ஈனர்கள்

தனிமையில் செல்லும் பெண்ணின்
நகைகளை குறிவைத்து அபகரிக்கும்
கூட்டம் இருந்தும் இன்று பெண்கள்
தனிமையில் செல்ல நடுங்குவது
அவர்கள் கற்பை குறிவைத்து நாசம் செய்யும்
வஞ்சகர்கள் கூட்டம்
ஓடும் ரயில், நடைபாதை, டாக்ஸி
கூட்டம் இல்லா தனியார் வாகனம் என்று
பரவலாய் தம்மை அணிவகுத்து
வேட்டை ஆடுது இந்த மிருக கூட்டங்கள்
ஒவ்வொரு நாளும் நாள் ஏடு
இவர்கள் கை வரிசை சுட்டி காட்டியும்
இவர்கள் அட்டகாசம் குறையவும் இல்லை
மீறி அதிகரித்தே போய்க்கொண்டிருக்கிறது
என்று தணியும் இந்த வீணர்கள் காம தாகம்
பெண்ணே பெண் இனமே பூமியில் இல்லாமல்
போகும் வரையா? நெஞ்சு துடிக்குது இன்று
பெண்ணின் பாது காப்பாற்ற நிலை கண்டு
வீர இளைஞர்களே விழித்து எழுந்திருங்கள்
இந்த கற்பு திருடர்களை வளைத்து
அவர்கள் இனம் நசித்து போக செய்திடுங்கள்
பெண்ணின் கற்பை காக்கும் போர் வீரராய்
மாறி விடுங்கள்
' பெண்ணின் வழி அது உயிர் நிலை
பெண்ண இன்றி வையம் மறைந்து விடும்'
இதை வையம் அறிந்திட இன்றே வீற்று எழுங்கள்
பெண்ணிற்கு அரனாய் மாறி விடுங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Sep-16, 10:14 am)
பார்வை : 61

மேலே