காதல்

அவள் மடி மீது
தலைவைத்து
எனை மறந்து
மயங்கிய வேளை
தொலை தூர
தொடர் வண்டியின்
அதிர்வுகளை என்
கால்கள் உணர
அப்பொழு தான்
நினைவில் உதித்தது
தொடர்வண்டிப்
பாதையில்
அவள் மடியில்
நான் என்பது
ஜாக்கிரதை உணர்வு
எனை
நகரச் சொல்லி
கட்டளை இட்டாலும்
பிரிய மனமின்றி
நகர நேர்ந்ததை
இன்றும் நினைத்துப்
பார்க்கின்றேன்
எங்களுக்குள்
இப்படி
பிரிவு ஏற்படும்
என்று தெரிந்து
இருந்தால்
அவளை நகர்த்தி
என் நகர்தலை
சிறிது தள்ளிப்
போட்டிருப்பேன்
காலங்கள் சடுதியில்
கடந்தது!
அந்த தொடர்
வண்டியைப் போல,
அவளுடன் இருந்த
அந்த
இனிமையான
தருணங்கள்
மட்டும் மனதில்
அப்படியே தங்கிவிட.
வேறெதையும் மனம்
மறுப்பதால்
பழைய நினைவுகளை
அசை போட்டபடி
இன்னும்
#காதலில்
உலா வருகின்றேன்
நடைபிணமாக..,
#sof_sekar