காலமெல்லாம்

வேதனைக்கு உண்டோ
முடிவு...
மறக்கடிக்கும் வலிமை
உண்டோ காலத்திற்கு...

இடிதாங்கும் மனதுக்கு
இல்லையே வலிமை நிதம்
வலிதாங்க...

தீ சுடும்
ஆசை வலிக்கும்...
தெரிந்தே யாரும் விடுவதில்லை
தீயில் விரலை...
பின் ஏன் தெரிந்தே
ஆசை வைத்தாய்...

காலம் பதில் சொல்லும்
மறக்கடிக்கும்...
நிதம் வலியை மட்டும்
தாங்கி நித்திரையில்
மீண்டும் மீண்டும்
வருவாயே... மறக்கமுடியாமல்

காலத்திற்கு வேண்டுமானால்
மறக்கடிக்கும் வலிமை
உண்டு... இல்லையே பழைய
நினைவுகளை மறக்கடிக்க...
காலமெல்லாம் சுமக்க
அழியாதே காலத்தால்...

எழுதியவர் : பவநி (13-Sep-16, 1:37 pm)
Tanglish : kaalamellaam
பார்வை : 57

மேலே