மழை

வானம்
பூமிக்கு வருவதற்காய்
தரை வரை கட்டிய
"தண்ணீர்பாலம்"!


காற்றின் இழைகளில்
கண்ணாடி முத்துக்களை 
கோர்த்து
சமைத்த சரம்...


மேகமங்கை
நீர் தெளிக்கிறாள்...
பூமியெங்கும்
பூக்கோளம் பூக்குமென்று...


இன்று
மரங்களும்
மலர்களும்
இலைகளும்
மலைகளும்

காலையும்
மாலையும்
இரவுமாய்
பூமியே
நீராடுகிறது!

தலைதுவட்டும்
காற்றுக் கைக்குட்டைகளும்
ஈரமாகின்றன...

நதிகளும்
கடல்களும்
நீரோடைகளும்
நனைகின்றன !


வாணக் குடை 
நட்சக்திர ஓட்டைகளுடன்
விரிகிற இரவுகளில்
மழை
வருவதில்லை !

இன்று
துளைகளை தைத்து
விரித்தபோதுதான்
பூமி நனைந்தது !

 

 

 

எழுதியவர் : கதர்நிலவன் (17-Sep-16, 4:43 pm)
பார்வை : 186

மேலே