வண்ண பெண்

உயர்ந்த பெண் அவள் படர்ந்த நெற்றியில் மூன்று வண்ண பொட்டுகள்
சிவப்பு பொட்டோடு அவளை பார்த்தால் அவசரமாய் செல்லும் என் கால்கள் கூட அசையாமல் நிற்கின்றன-
மஞ்சள் பொட்டோடு அவளை பார்த்தால் கண் சிமிட்டாமல் அவளை பார்த்து ரசிக்கின்றன என் கண்கள்-
பச்சை நிற பொட்டோடு அவளை பார்த்தால் வருத்தமின்றி நகர்கின்றன என் கால்கள் - அடுத்த நூறு மீட்டர் தொலைவில் அதே பொலிவுடன் அவள் நிற்பாளே என் கால்களை கட்டி போட - ஆதலால் ! சிக்னல்

கவிதை by ,
கவி.S

எழுதியவர் : (19-Sep-16, 1:02 pm)
Tanglish : vanna pen
பார்வை : 343

மேலே