வெள்ளொத்தாழிசை - இயற்கையின் அழகு - மரங்களே சான்று
காலைக் கதிரவன் காண்கின்றான் நம்மையெல்லாம்
மாலை மயங்கி மதியழகி நோக்கிடவே
சாலை மரங்களே சான்று .
பாலை நிலத்தினிலும் பாசமுடன் நாள்தோறும்
காலை அழகினையும் காண இயற்கையின்
சாலை மரங்களே சான்று .
ஆலைக் கழிவுகளை அப்படியே விட்டுவிட்டால்
சோலை மலர்களும் சோர்ந்துவி டாதிருக்க
சாலை மரங்களே சான்று .