வெள்ளோத் தாழிசை - இயற்கையை அழிக்காதே

எழிலாய்த் தெரியு மியற்கை வரமாம்
செழிக்கும் பயிர்களும் செம்மையைச் சொல்லு
மழிக்காம லென்று மணுகு.

விழியெனக் காத்து விலக்காமல் நின்றால்
வழியில் வளர்ந்திட்ட வானோங்கும் காட்டை
அழிக்காம லென்று மணுகு.

செழித்தச் செடிகளும் சேரு மிடத்தை
மொழிந்திடு மெந்நாளும் மொத்தமாய்ச் சுற்ற
மழிக்காம லென்று மணுகு.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-16, 10:12 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 122

மேலே