மறதியும் வரமே

மறதியும் வரமே...

கண்முன் நடந்திடும் அவலங்களை
ஒரு நொடியில் மறந்திட முடிந்தால்
மறதியும் வரமே....

கன்னியவள் காமுகர் நடுவே சிக்கி
சிதைந்து உயிர் துறக்கும் வேளை
அனைத்தும் மறந்து அவள் இழந்த
கற்போடு மீண்டும் பிறந்தால்
மறதியும் வரமே....

ஊட்டி வளர்த்த மகன் அவனும்
முதியோர் இல்ல வாசலிலே விட்டு
செல்லும் நேரம்...
அவள் கண்ணீரை போக்கிடவே
அவள் தன் நினைவுகளை இழந்தால்
மறதியும் வரமே....

யுத்தம் என்ற பெயரில் பல உறவுகளை
இழந்து தினமும் செத்துப்பிழைக்கும்
உயிர்கள் அவர்களை முழுதாக
மறந்திட முடிந்தால்
மறதியும் வரமே....

மனிதம் தொலைத்த மனிதன் அனைத்தும்
மறந்து புது மனிதனாக பிறந்திட முடிந்தால்
மறதியும் வரமே....

எழுதியவர் : அன்புடன் சகி (29-Sep-16, 8:42 pm)
பார்வை : 122

மேலே