மழையில் தீயாய் காதல்

தூவானம் தூவிய துளிமழையில் நனைந்த உன்கார்முகில் கூந்தலில்
காதலுக்காய் கட்டியெனை சிறைபிடித்த
பெண்ணே...!

உனதிடைகூடி நனைந்த எனதுடல் மீளாது
உன்வசம் மனங்குளிராது தீப்பிளம்பாய் வெடித்துச் சிதறுதடி...

உனது வெட்கங்கெட்ட அசட்டுச் சிரிப்பில் ஒதுங்கியே
எனில் பட்டுத்தெரிக்கும் உன்காதல் பட்டமரம்போல் சுட்டுப்போனதடி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Oct-16, 3:09 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 66

மேலே