அமிர்

தூரப்பார்வை இனிக்கிறது
கிட்டப்பார்வை கசக்கிறது
குடிசை வீடு !!

கடந்த புகைவண்டியை
வழியனுப்புகிறது
புல்வெளி !!

மருத்துவமனை பராமரிப்பு
சிகிச்சையில் மாற்றம்
அறுவை சிகிச்சை !!

சுரண்டல் காரர்களுக்கு
எட்டவில்லை
என் வானம் !!

முதிர்கண்ணி
விற்கும் பூ மட்டும்
மலர்ந்துவிடுகிறது !!

- அமிர்

எழுதியவர் : அமிர் (7-Oct-16, 1:55 pm)
சேர்த்தது : AMIR TN
பார்வை : 94

மேலே