கண்ணீரும் கவிதையாய் மாறுமோ

நான் பார்க்கும் உன் கண்கள்
என்றும் மர்மம் ஆனவை
நீ யார் என்று தெரிவதுற்குள்
நான் யார் என்று தெரிந்து கொள்கிறேன்

நீ என்னை விட்டு
பிரியும் வேலை வந்தால்
எனக்கு என் இமை கூட
சுமையுமாய் தான் தெரிகின்றது

நீ என்னோடு இல்லை என்று
சோகத்தில் சிரித்ததை விட
நீ என்னோடு இருக்கும் போது
மகிழ்ச்சியில் அழுத நேரம் அதிகம்...

அன்பே,
நீ என்னை பார்த்தவுடனே
என் மனதை எடுத்துவிட்டாய்
நீ என்னை விட்டு பிரிந்த உடனே
என் உயிரை எடுத்துவிட்டாய்
காதல் கவிதையை துள்ளி வந்த நீ
இன்று சோகப்பாடலாய் பிரிந்து செல்கிறாய்
என்னால் உன் கண்ணீரும் கவிதையாய்
மாறுமோ என் கல்லறையில்
======================================
பிரியமுடன்,
J K பாலாஜி

எழுதியவர் : J K பாலாஜி (11-Oct-16, 12:05 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 299

மேலே