ஆய கலைக்கு அதிபதி
ஆய கலைக்கு அதிபதி
மாய உலக காரி
சேய் உந்தன் பாதம்
தாள் பணிந்து
தொடங்கிடும் பணி.
சங்காரம் செய்து
அகங்காரம் இல்லாமல்
சிங்காரமாய் அமா்ந்து
சிங்கத்தில் வரும் தேவியே
கரு நிற ஆத்தாவை காண
வெள்ளை காரா் வருகின்றாா்கள்
அத்தனை பக்தரும்
சித்தம் தாள் பணிந்து
வணங்கியே நித்தம்
நாட்கள் தொடங்கு கின்றோம்.